×

3வது டெஸ்ட்டிலும் இங்கி. வெற்றி முகம்; ஒயிட்வாஷ் பரிதாபத்தில் உலக சாம்பியன் நியூசிலாந்து

லீட்ஸ்: இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 329, இங்கிலாந்து 360 ரன் எடுத்தன. 31 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 105.2 ஓவர்களில் 326 ரன் எடுத்து. டேரில் மிட்செல் 56, டாம் பிளன்டெல் நாட்அவுட்டாக  88 ரன் எடுத்தனர். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 296 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், அலெக்ஸ் லீஸ் 9, சாக் கிராலி 25 ரன்னில் அவுட் ஆகினர். நேற்றைய ஆட்டநேர முடிவில இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் எடுத்திருந்தது. ஜோரூட் 55, ஒல்லி போப் 81 ரன்னில் களத்தில் இருந்தனர். 8 விக்கெட் கைவசம் உள்ள நிலையில், இன்னும் 113 ரன்களை தேவை என்பதால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல் 2 டெஸ்ட்டிலும் தோல்வி அடைந்த  உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து ஒயிட்வாஷ் பரிதாபத்தில் உள்ளது.

Tags : Ingi ,New Zealand , Ingi in the 3rd Test too. Hit face; World champion New Zealand in whitewash pity
× RELATED சான்ட்னர் சரவெடியில் நியூசிலாந்து அசத்தல்