தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் 22 சிறுவர்கள் பலி: மது குடித்த போது மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்..!

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு லண்டன் மாகாணத்தில் ஏராளமான கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள விடுதி ஒன்றுக்கு நேற்று இரவு வந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் மது அருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மயங்கி கிடந்த மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதில் 22 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்று தடயவியத்துறை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கேளிக்கை விடுதியில் சிறுவர்கள் 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: