நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்.கே.ஜி பயிலும் 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சிவந்திபட்டிக்கு அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட சிறுவர், சிறுமிகள் இன்று பாளையங்கோட்டை கேட்டிஸ் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். வசவப்புரம் - செய்துங்கநல்லூர் சாலையில் அனவரதநல்லூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆட்டோவுக்கு அடியில் சிக்கியிருந்த எல்.கே.ஜி பயிலும் சிறுவன் நவீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.