சென்னை விமான நிலையத்தில் அதிக விமானங்களை கையாளும் வகையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிவு!!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிக விமானங்களை கையாளும் வகையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் 3.66 கிமீ நீள பிரதான ஓடுபாதை பெரிய விமானங்கள் தரை இறங்கவும் புறப்படவும் பயன்படுத்தப்படுகிறது. 2.89 கிமீ நீளமுள்ள மற்றொரு ஓடுபாதையில் 76 பயணிகளுக்கும் குறைவாக உள்ள சிறிய விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்கி மணிக்கு 50 விமானங்களை கையாள விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி முதல் பிரதான ஓடுதளத்தை விமானங்கள் புறப்படுவதற்கு மட்டுமே பயன்படுத்தவும் 2வது ஓடுதளத்தை விமானங்கள் தரையிறங்குவதற்கும் சிறிய விமானங்கள் புறப்படுவதற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டை அறை ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு ஓடுபாதையில் இருந்து மற்றொரு ஓடுபாதைக்கு விமானங்கள் சுலபமாக செல்ல இணைப்பு பாதைகளை ஏற்படுத்தும் பணியும் நிறைவுபெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories: