பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றோரு புறம் இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவில் எந்த ஒரு கூட்டம் நடத்தவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும் என்றும் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சியையோ, தொண்டரையோ கட்டுப்படுத்தாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, தம்பிதுரை, மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆதரவாளர்களை  ஓபிஎஸ் சந்தித்து வருவது, வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது, மாவட்டம்  தோறும் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள்  குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: