×

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

சென்னை : சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்கக்கட்டணம் உயர்வு குறித்து தொழில்நுட்ப அதிவிரைவு சாலை திட்டத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதன்படி நாவலூர் சுங்கச் சாவடியில் ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கார்களுக்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.33-ஆகவும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார், ஜீப் ஒரு முறை சென்று திரும்ப ரூ.22, ஒருநாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ. 37-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ, கார், ஜீப்  ஆகியவை மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ.345 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சரக்கு வாகனங்களுக்கு மாதம் முழுவதும் பயணிக்க பயண அட்டை ரூ.3,365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.


Tags : Nawalur Sunkhanganthi Road ,Rajivgandi Road, Chennai , Nawalur, Customs, Customs
× RELATED ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு...