ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கலில் பக்தர்கள் தேர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைனில் இன்று ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பரில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் என 8,070 டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இவற்றை பெறுவதற்கு திங்கட்கிழமை (இன்று)  காலை 10 மணி முதல் 29ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை தேவஸ்தான இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், 29ம் தேதி மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் தகவல் வழங்கப்படும். இந்த தகவல் பெற்ற பக்தர்கள் 2 நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். எனவே, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு  முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

அமெரிக்காவில் திருக்கல்யாணம்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டல்லாஸ் நகரில் உள்ள தனியார் அரங்கில் நிவாச திருக்கல்யாணம் உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர்  சுப்பா ரெட்டி, ஆந்திர மாநில என்ஆர்டி தலைவர் மேடபடி வெங்கட், ராஜூ விக்னேஷ், அரசு ஆலோசகர் ரத்னாகர் உள்ளிட்டோரும், ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: