இந்தியா - ஜப்பான் நல்லுறவு 70 ஆண்டு நிறைவு தமிழ் இசைக்கு ஜப்பானியர்கள் நடனம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஜப்பான் சிட்டி உள்ளிட்ட இடங்களில் ஜப்பானிய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில், ஏராளமான ஜப்பானியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் ஜப்பானிய தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பில், 70ம் ஆண்டு நிறைவு விழா மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு தமிழ் நாட்டின் கிராமிய இசை, ஜப்பான் நாட்டு கிட்டார் இசை இசைத்து கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சுசுகி சதோஷி, திரை பிரபலங்கள், ஜப்பான் நாட்டு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சியில் தமிழ் இசையை இசைக்கும்போது, இசைக்கு ஏற்றவாறு ஜப்பானியர்கள் நடனமாடினர்.

Related Stories: