ராஜிவ் காந்தி சாலையின் சர்வீஸ் சாலையில் மண் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

துரைப்பாக்கம்: ராஜிவ் காந்தி சாலையில், ஏராளமான ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இதனால், இச்சாலையில் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ராஜிவ்காந்தி சாலையில் ஆங்காங்கே   தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, துரைப்பாக்கம் சிக்னல் அருகே, கட்டுமான பணிகள் அதிகளவில் நடக்கின்றன.

இந்த கட்டுமான பணிகளுக்காக, தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து கிடைக்கும் மண்ணை லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றனர். அவ்வாறு கொண்டு   செல்லப்படும் மணல் இந்த சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றது. இதனால், இவ்வழியாக  செல்லும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களால் தூசி பறந்து மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,  கண் எரிச்சல், ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதியினர் கூறுகையில், ‘‘தனியார் நிறுவனங்கள் கட்டுமான பணிகளால், இச்சாலை முழுவதும் மணல் சிதறி கிடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Related Stories: