சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பம் பதிவேற்றம்

சென்னை: ஜூன் 2022 செமஸ்டர் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் இன்று பதிவேற்றம் செய்யப்படும் என சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:  சென்னை பல்கலையின் திறந்தநிலை கல்வி நிறுவனத்தில், இளநிலை படிப்புகள், நூலகம், தகவல் அறிவியல், முதுநிலை நூலகம், தகவல் அறிவியல் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஜூன் 2022 பருவ தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் www.ideunom.ac.in என்ற இணைய முகவரியில் இன்று பதிவேற்றம் செய்யப்படும். 1980-81 பேட்ச் முதல் அரியர் வைத்தவர்களும் இந்த ஜூன் தேர்வுகளை பயன்படுத்தி தேர்ச்சி பெறலாம்.

Related Stories: