பூண்டி ஒன்றியத்தில் திமுக தெருமுனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அரியத்தூர் ஊராட்சியில் பூண்டி வடக்கு  ஒன்றிய திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெரிஞ்சேரி பி.ரவி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் வேணுகோபால், ஒன்றிய நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சுப்பிரமணி, நாகராஜ், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் ஜெயவேல், சசிகலா பாலசுப்பிரமணி, ஜெயராமன் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, தமிழ் சாதிக் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இறுதியில் வாசு நன்றி கூறினார்.

Related Stories: