கல்லூரி மாணவி கடத்தல்?

திருவள்ளூர்: கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு சதீஷ் (20) என்ற மகனும் ஜனனி (19) என்ற மகளும் உள்ளனர். ஜனனி சென்னையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரது தோழிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா என்று விசாரிக்கின்றனர்.

Related Stories: