பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே சுந்தரம்பிள்ளை நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்படுவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிறுத்தம், பள்ளி, தேவாலயம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களில் டாஸ்மாக் திறக்கக் கூடாது என அறிவித்துள்ள நிலையில் அவரின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது கண்டனத்துக்குரியது என்றனர். மேலும் டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம். மீறி கடை திறந்தால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த வாரம் இந்த பகுதி மக்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: