குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலி

சென்னை: சென்னையில் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களில் 4 காவல் நிலையங்களுக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால், அவர்களுக்கான பணியையும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களே கூடுதலாக கவனித்து வருகின்றனர். புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட ஓட்டேரி காவல் நலையத்தில் ஜானி செல்லப்பா சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வருகிறார். அந்த காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தினால் குற்ற வழக்குகளையும் இவரே சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது. இதேபோல், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வேலு வேப்பேரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

அப்போது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ஜானகிராமன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். அன்றுமுதல் புளியந்தோப்பு குற்றப்பிரிவுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் ஜானகிராமனே கூடுதலாக அதனை கவனித்து வருகிறார். எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக அம்பேத்கர் உள்ளார். பல மாதங்களாக இந்த காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணி காலியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இதனை கூடுதலாக கவனித்து வருகிறார். வியாசர்பாடி காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சதீஷ் கூடுதலாக குற்றப்பிரிவை கவனித்து வருகிறார். இதன் மூலம் குற்றப்பிரிவில் ஆவணங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: