திருவள்ளூரில் வரும் 29ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: