தடை செய்யப்பட்ட 13 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 124வது வார்டு, கச்சேரி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மேயர் பிரியா, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் என 4,730 பேர் பங்கேற்றனர். இவர்கள் 49,441 இல்லங்களுக்கு சென்று குப்பையை மக்கும் மக்காத குப்பையாக பிரித்து வழங்குவது குறித்து 69,230 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

அதன் தொடர்ச்சியாக அதிக குப்பை உற்பத்தியாகும் இடங்களாக 981 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 419 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த  தீவிர தூய்மை பணியில் 3,37,257 கிலோ திடக்கழிவுகளும் 3,64,427 கிலோ கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டன. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13,060 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: