ஆவடி, பொன்னேரியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி: அமைச்சர் நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி, பொன்னேரியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டார். ஆவடியில் திமுக சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஏற்பாட்டில் ஆவடி தொகுதி திமுக இளைஞர் அணி நடத்திய திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் வரவேற்றார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர் ஜி.நாராயண பிரசாத், பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, நகர பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஜி.டில்லிபாபு, சங்கர், மு.பா.சசிகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பல.ச.காமேஷ், பா.நரேஷ்குமார் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பொன்னேரி: பொன்னேரி திமுக இளைஞரணி சார்பில், நேற்று முன்தினம் மாலை பொன்னேரியில் ஒரு தனியார் மண்டபத்தில் மீஞ்சூர், சோழவரம் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் திராவிடத்துக்காக வகுத்து வந்த பாதைகளை குறித்து இளைஞர்களுக்கு எடுத்து கூறினார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் பயன்கள் குறித்து விவரித்தார். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்யபுத்திரன், தலைமை கழக பேச்சாளர் மதிமாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அத்திப்பட்டு உதயசூரியன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னேரி சுகுமாரன், சோழவரம் செல்வசேகரன், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: