செங்குன்றம் அருகே சேதமான தரைப்பாலம்: சீரமைக்க கோரிக்கை

புழல்: செங்குன்றம் அருகே உடைந்து கிடக்கும் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் திருவிக தெரு கால்வாய், செங்குன்றம் ஜிஎன்டி சாலை இணைக்கும் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த ஒரு மாத காலமாக உடைந்துள்ளது.  இதை சரி செய்யாமல், தடுப்பு போடப்பட்டுள்ளது. இதனால், இந்த பாலம்  வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி  வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த பாலத்தை  கடந்து செல்லும் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகி, படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் மற்றும் செங்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்துபோன தரை பாலத்தை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: