திமுக ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் 15வது உட்கட்சி தேர்தலை ஒட்டி ஒன்றிய அளவில் உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் - சாலவாக்கம், வாலாஜாபாத் - தெற்கு, வாலாஜாபாத் - வடக்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு லத்தூர் வடக்கு, லத்தூர் தெற்கு, திருக்கழுக்குன்றம் தெற்கு, மதுராந்தகம் தெற்கு, மதுராந்தகம் வடக்கு, சித்தாமூர் கிழக்கு, சித்தாமூர் மேற்கு, அச்சரப்பாக்கம் வடக்கு அச்சரப்பாக்கம்தெற்கு, ஒன்றியங்களில் உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 28ம் தேதி காலை  காஞ்சிபுரம் பவள விழா மாளிகை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு இறைவனிடம் வேட்புமனு தாக்கல் திமுகு தலைமை அறிவித்துள்ள கட்டணத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்கலாம்.

Related Stories: