தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கூடுவாஞ்சேரி: தேசிய பேரிடர் மேலாண்மை துறை சார்பில், வட்ட அளவிலான தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்புகள் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் ராஜா முன்னிலை வகித்தார். இதில், மறைமலைநகர் உட்பட்ட தீயணைப்பு துறை ஆய்வாளர்கள் லோகநாதன், வீரராகவன், தேசிய மாணவர் படை அலுவலர் சந்திரசேகரன், இளைஞர் செஞ்சிலுவை சங்க நிர்வாகி பாரதி, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகி நாகேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள், தேசிய பேரிடர் இன்னல் மேலாண்மை துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடத்தினர். இதில், அந்தந்த துறை சார்ந்த கருத்துக்கள் வழங்கப்பட்டன. மேலும் மழை, பூகம்பம், புயல் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி காப்பாற்றுவது? அவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்வது என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாடம்பாக்கம் ஆகிய குறு வட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: