கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தையின் கையை உடைத்த தாய் கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை சிமென்ட் ரோட்டை சேர்ந்தவர் கபிலன். இவரது மனைவி தமிழரசி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஜனனி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த 2 மாதத்தில் கபிலன் பிரிந்து சென்றுவிட்டார். குழந்தையுடன் தமிழரசி தனியாக வசித்த வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவாவுடன் தொடர்பு ஏற்பட்டு தனிமையில் இருந்து வந்துள்ளனர். சிவா வீட்டிற்கு வந்து போகும் போது குழந்தை இடையூறாக இருப்பதால் பலமுறை குழந்தையை தாக்கி அடித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை தாக்கியதில் குழந்தையின் கை உடைந்துள்ளது. அதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த காருண்யா தேவி (41), வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசியை கைது செய்து நடத்திய விசாரணையில், குழந்தையை தாக்கி கையை உடைத்தது உண்மை என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: