பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் 43வது‌ வார்டில் மண்டல‌ நல அலுவலர் சாய் சுதா மேற்பார்வையில், சுகாதார அதிகாரி ஜெகநாதன் தலைமையில் நேற்று அங்குள்ள மளிகை கடைகள், பெட்டிகடைகள், ஓட்டல்கள், டிபன் கடைகள் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டீ  கப் உள்ளிட்டவைகளை பதுக்கி, பயன்படுத்தப்படுவது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 6 கடைகளுக்கு ரூ.4,500 அபராதம் விதித்தனர். தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ விற்பனை செய்தாலோ கடையை மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: