அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மதுராந்தகம் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள் தேர்வு: வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறிப்பிட்ட ஊராட்சிகளை தேர்வு செய்யப்படும். அதன் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தருவதே இந்த திட்டமாகும். இது குறித்து, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைசெல்வன் கூறுகையில், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட புக்கத்துறை, மாமண்டூர், வையாவூர், கீழக்கண்டை, அண்டவாக்கம்,  முன்னூத்தி குப்பம், சிலாவட்டம், கிணார், காவாதூர் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள், நூலகம், பூங்கா, பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள், சமுதாயக் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான பணிகள் இந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும். என கூறினார்.

Related Stories: