ஸ்ரீபெரும்புதூரில் 206 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 14 வாகனங்கள் உரிமம் ரத்து

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து செல்லும் 206 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் பள்ளி வாகனங்களின் உரிமம் முறையாக உள்ளதா, வாகனங்களில் எப்.சி., பர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா, மாணவர்களை ஏதுவாக ஏற்றி செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா மற்றும் விபத்து நேரங்களில் உடனடியாக வெளியேற வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.

தனியார் பள்ளிகளை சேர்ந்த 174 வாகனங்களை ஆய்வு செய்ததில், 14 வாகனங்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இயக்கப்படுவது அதிகாரிகள் கண்டறிந்து வாகன உரிமத்தை ரத்து செய்தனர். இதை தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்கள் இயக்கப்படும்போது திடீரென தீ விபத்து நேரிட்டால் அதனை எவ்வாறு கையாண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வருவது என்பனவற்றை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை மூலம் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: