சொல்லிட்டாங்க...

* இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, அவசர நிலையின் இருண்ட காலத்தை நாமும், எதிர்கால சந்ததிகளும் மறந்துவிட கூடாது. - பிரதமர் நரேந்திர மோடி

* மக்களின் கவனத்தை திசை திருப்பும் பிரதமரின் திறமையால், ரூபாயின் பணமதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எதையும் மறைக்க முடியாது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பின் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து, அதிகார சுகத்தை பாஜவினர் அனுபவிக்கின்றனர். - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

* கட்சி மாறிகளை ஒரு காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடாது. இப்படி கட்சி மாறிகள் வருவதால்தான் இந்திய அரசியல் தூய்மை இழந்து இருக்கிறது. - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Related Stories: