கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, சேலம், ஈரோடு, பல்லடம், திருப்பூர், போன்ற பகுதிகளில் அதிகமாக தேங்காய் உற்பத்தியாகிறது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, கிராம கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்கிறது. தற்பொழுது தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயின் விலை மிகவும் சரிந்துள்ளது. இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.150க்கும், உரித்த தேங்காய் கிலோ 1க்கு ரூ.50ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: