3வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 296 ரன் இலக்கு

லீட்ஸ்: நியூசிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 296 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. டேரில் மிட்செல் 109 ரன் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோ 162, ஓவர்ட்டன் 97, பிராடு 42 ரன் எடுத்தனர். 31 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து, 4ம் நாளான நேற்று 326 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 76, வில்லியம்சன் 48, டேரில் மிட்செல் 56, பிளண்டெல் 88 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Stories: