கடும் நெருக்கடிக்கு இடையே பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் அதிகரிப்பு: ஒரு லிட்டர் ரூ.470, ரூ.460

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு முறையே ஒரு லிட்டர் ரூ.470, ரூ.460 ஆக விற்கப்படுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி வரலாறு காணாத வகையில் சரிந்திருப்பதால், நாட்டின் பொருளாதார நிலை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடுமையான விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்சார பயன்பாட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் வாங்க பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. அவ்வாறு வரிசையில் காத்திருந்த 10 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.50ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60ம் இலங்கை அரசு உயர்த்தி உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.470க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.460க்கும் விற்கப்படுகிறது.

* 3 மாதங்களில் 3 முறை

இலங்கையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து இதுவரை 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கடைசியாக கடந்த மே 24ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை முறையே 24 சதவீதமும், 38 சதவீதமும் இதுவரையில் உயர்ந்துள்ளது.

Related Stories: