பொதுப்பணி, நீர்வளத்துறையில் 14 பேருக்கு தலைமை பொறியாளராக பதவி உயர்வு

சென்னை: பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் 14 பேருக்கு தலைமை பொறியாளர்களாகபதவி உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணி, நீர்வளத்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் அவ்வப்போது, பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டில் பொதுப்பணி, நீர்வளத்துறையில் காலிபணியிடங்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்ற பொறியாளர்களுக்கு பதவி உயர்வு பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீர்வளத்துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் 14 பேருக்கு தலைமை பொறியாளராகவும், எலக்ட்ரிக்கல் பிரிவில் செயற்பொறியாளர் ஒருவருக்கு இணை தலைமை பொறியாளராகவும், நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் 28 பேருக்கு கண்காணிப்பு பொறியாளராகவும், பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் 16 பேருக்கு கண்காணிப்பு பொறியாளராகவும், நீர்வளத்துறையில் உதவி செயற்பொறியாளர்கள் 32 பேருக்கு செயற்பொறியாளராகவும், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர்கள் 35 பேருக்கு செயற்பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: