தலைமறைவான மாவோயிஸ்ட் ராஜபாளையம் அருகே கைது

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த கீழராஜகுலராமன் அருகே, குடல்பூரி நத்தம் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக மதுரை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர், கடந்த 2016ல் கேரள மாநிலத்தில் ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட் ராகவன் (40) என்பதும், அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 2021ல் ஜாமீனில் வெளிவந்ததும், அதன்பின் அவர் மாயமானதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த கியூ பிராஞ்ச் போலீசார், கேரள மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: