என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்; என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்.

எல்லா சிக்கலும் விரைவில் தீரும்; சிக்கலுக்கு காரணம் யார் என்பதும் எனக்கு தெரியும். சதிவலையை பின்னியவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் உரிய தண்டனையை அளிப்பார்கள். அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்; தொண்டர்களுக்காவே நான் இருப்பேன். அதிமுகவில் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்திய நபர்களுக்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மனதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. ஓபிஎஸ் போன்ற தொண்டன் கிடைத்தது என் பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் அளித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்.

Related Stories: