அச்சுறுத்தும் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்ட வேண்டுகோள்

தொண்டி: தொண்டி அருகே செங்காலன்வயல் கிராமத்தில் எவ்வித பயன்பாடும் இல்லாமல் ஆபத்தை ஏற்ப்படுத்தும் விதமாக உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அருகே செங்காலன்வயல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வந்தனர்.

கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதால் தற்போது குழந்தைகளை வேறு இடத்தில் வைத்து நடத்துகின்றனர். இந்த கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்தும் ஜன்னல் உடைந்தும் இடியும் அபாயத்தில் உள்ளது. இந்த பழைய கட்டிடத்தின் மிக அருகில் ஆரம்ப பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

 இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு வித அச்சத்துடன் இருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் முன்  இக்கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடத்தை கட்டித்தர இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டன் கூறியது, அங்கன்வாடி தற்போது வேறு இடத்தில் செயல்படுவதால் இடிந்த கட்டிடம் எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. ஆனால் அருகில் ஆரம்ப பள்ளி இருப்பதால் அந்த பள்ளி மாணவர்கள் இந்த கட்டிடத்தின் அருகில் வருகின்றனர். இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. அதனால் இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: