செங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து விவசாயம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கம்: ‌‌செங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் இரு கரையோரங்களிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து விவசாய விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்நிலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆற்றுப்படுகை என பல்வேறு வகைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், செங்கம் பகுதியில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் செய்யாறு, செங்கம், புதுப்பாளையம் வரை ஆற்றின் இரு கரையோரங்களிலும் பலநூறு அடிகளுக்கு மேல் சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளனர்.

 இதனால் வரும் காலங்களில் செய்யாற்றுப்படுகை காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: