வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் தடையை மீறி குளித்தவர்களுக்கு ரூ. 24,000 அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் தடையை மீறி குளித்த 6 பேருக்கு தலா ரூ.6000 என மொத்தம் ரூ. 24,000ஐ வனத்துறையினர் அபராதமாக விதித்தனர். வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட உப்புத்துறை அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் யானைக்கஜம் அருவி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த அருவியில் நீர்வரத்து அதிக அளவில் இருக்கும்.

இந்த அருவியில் குளிக்க ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு இந்த பகுதியை திருவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அதன்பின்னர் யானைகெஜம் அருவிக்கு பொதுமக்களை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் நேற்று வருசநாடு வனச்சரகர் சாந்தவர்மன் தலைமையிலான வனத்துறையினர் யானைகெஜம் அருவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி 4 பேர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை அருவியில் இருந்து கிளம்பி செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் மது போதையில் இருந்த அவர்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து 4 பேரையும் பிடித்து வருசநாடு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின், வனத்துறையினர் புலிகள் சரணாலய பகுதியில் அனுமதியின்றி குளித்ததற்காக 4 பேருக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் வரும் நாட்களில் வனத்துறையினர் அனுமதியின்றி யானைகெஜம் அருவிக்கு செல்பவர்கள் மீது வனத்துறையினர் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகர் தெரிவித்தார்.

Related Stories: