தவளக்குப்பத்தில் பலத்த காற்றுடன் கனமழை மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்விநியோகம் பாதிப்பு

தவளக்குப்பம்: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரம் சாய்ந்தது. மின்கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

இதன் காரணமாக தவளக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள், அதிகளவு சேதம் ஏற்பட்ட இடங்களை துண்டித்துவிட்டு, மற்ற இடங்களுக்கு மின்வினியோகம் வழங்கினர்.

பின்னர் நேற்று காலை முள்ளோடையில் உள்ள மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த மின்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

Related Stories: