காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலிருந்து, திருச்செங்கோடு மக்களுக்கு கொண்டு செல்லும் குடிநீர் குழாயில், காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் உறிஞ்சி அனுப்பும் தண்ணீரின் பெரும்பகுதி, இங்கே வெளியேறி வீணாகி வருகிறது.

நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக வீணாகி வெளியேறும் தண்ணீரால், வாரி நகர் குடியிருப்பு பகுதிகள் நிரம்பி, களரங்காடு செல்லும் கிராமச்சாலையை சேதப்படுத்தி ஓடையில் செல்கிறது.

தகவல் அளித்தும் உடைப்பை சரிசெய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. இதனால் காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. எனவே உடன் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

Related Stories: