பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கரூர் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில் கரூர் சாலையில் விபத்தை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை அருகில் பஸ் நிலையம் செல்லும் சாலை, கரூர் சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய மூன்று சாலை சந்திப்பு உள்ளது.

இந்த சந்திப்பு குறுகலாக உள்ளது. இந்த சாலையில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் மற்றும் வணிக வளாகங்களும் உள்ளன. அரசு மருத்துவமணைக்கு 700 கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். காலை மாலை நேரங்களில் கல்லூரி பள்ளி செல்லும் வாகனங்கள் இந்த சந்திப்பில் நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் மூன்று சாலை சந்திப்பு வளைவில் டூ வீலர்கள் உள்ளிட்ட வாகணங்கள் அதி வேகத்தில் வந்து திரும்புகின்றன. அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஓரிருமுறை இங்கே ஏற்பட்டுள்ள விபத்துக்களால் இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

ஆகையால் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில் கரூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் விதமாக பெரிய விபத்து ஏற்படும் முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: