வத்திராயிருப்பு அருகே மாந்தோப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்; சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியை சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, காட்டு மாடு, காட்டு பன்றி, மான், மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், கான்சாபுரத்தை அடுத்த அத்திக்கோவில் மலை அடிவாரப்பகுதியில் கான்சாபுரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான தோப்பிற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யாணைகள் 30-க்கு மேற்ப்பட்ட மாமரங்களை ஒடித்து சேதப்படுத்தின.

மாம்பழங்களை ருசி கண்ட யானைகள் மாந்தோப்புகளை நாசம் செய்து வருகின்றன. எனவே, விவசாயிகளுக்கு டார்ச் லைட் மற்றும் பட்டாசு வழங்க வேண்டும்.

மலையடிவார பகுதிகளில் வனத்துறையினர் கூடாரம் அமைத்து ரோந்து செல்ல வேண்டும்.

வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி முத்துராஜ் கூறுகையில், ‘எனது மாந்தோப்பிற்குள் யானைகள் புகுந்து 30க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

இதில், வேரோடும் மாமரங்களை சாய்த்து உள்ளது. வனத்துறையினர் தீவிர ரோந்து செல்வது இல்லை. மலை அடிவாரப்பகுதியை சுற்றி, வனவிலங்குகள் வராமல் தடுக்க சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: