தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளுக்கு இடையில் மழை நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணி

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி ஊராட்சி வளாகத்தில் பலன் தரும் வகையில் மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். இந்த மரக்கன்றுகளுக்கு இடையில் மழை நீர் தேங்கும் விதமாக மழை நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மகாத்மா காந்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்த மழை நீர் உறிஞ்சி குழியானது இரண்டு மரங்களுக்கு இடையில் மூன்று மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் என்ற கணக்கில் ஒரு அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் அவ்வப்பொழுது மழைப்பொழிவு இருக்கும் காரணத்தினால் மரக் கன்றுகளுக்கு போதுமான வகையில் மழைநீர் கிடைக்கும்.

இதன்மூலம் அதிகப்படியாக மரங்கள் வளர்ச்சி பெறுவது மட்டுமின்றி அதன் பலன்களையும் தரும் என்ற நோக்கில் அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories: