வக்கான புரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும்; அய்யர்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் அய்யர் பாளையம் கிராம மக்கள் வக்கானபுரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் தொண்டமாந்துரை ஊராட்சியை சேர்ந்த அய்யர்பாளையம் கிராமம். இங்கு 100க்கான குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் வயலுக்கு செம்மண்குட்டை செல்லவேண்டும்.

அங்கு செல்ல இடையில் உள்ள வக்கான புரி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இந்த பச்சமலை கோரையாற்று அருவியிருந்து வரும் தண்ணீர் விஜயபுரம் அய்யர்பாளையம் தொண்டமாந்துரை வழியாக கிருஷ்ணாபுரம் வெள்ளாற்றில் கலக்கிறது. பச்சமலை பகுதியில் தற்போது விட்டு விட்டு திடீரென மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

ஆற்றை கடந்து வர சிரமமாக உள்ளது. இதனால் இவர்கள் அ.மேட்டூர் வழியாக சென்று சுற்றி வரவேண்டும். இதனால் இவர்களால் செம்மண்குட்டையிலிருந்து தினந்தோறும் 200 லிட்டர் பால் அய்யர்பாளையம் சொசைட்டியில் கொண்டு வந்து காலை மாலை இருவேளை ஊற்றவேண்டியுள்ளது.

மற்றும் அங்கு பயிரிடப்பட்டுள்ள் மல்லிகை பூ, சம்மங்கு ஜாதி பூ மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை கொண்டு வருவதில் சிக்கலாக உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல விஜயபுரம் வந்து பேருந்து பிடிக்க வேண்டும்.

கோடை காலத்திலேயே இப்படி தண்ணீர் வருவதால் மழை காலம் வந்தால் மேலும் கஷ்டமாக இருக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் வக்கான புரி ஆற்றில் பாலம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: