ஓடும் பேருந்தில் கம்மல் திருட்டு

வேளச்சேரி: பள்ளிக்கரணை, விஜிபி சாந்தி நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி லட்சுமி (43). வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், நேற்று பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலையை முடித்துவிட்டு, என்ஐஓடி பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் பள்ளிக்கரணை சென்றார். பள்ளிக்கரணை நிறுத்தத்தில் இறங்கியவுடன் கைப்பை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் வைத்திருந்த செல்போன் மற்றும் அரை சவரன் கம்மலை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது தெரிந்தது.

Related Stories: