சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் எடுத்து செல்ல முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் நேற்று ஆர்.பி.எப் போலீசார் சோதனை செய்தபோது, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரை சந்தேகத்தின்  பேரில் சோதனை செய்தபோது, தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று சோதனை செய்த போது அவரிடம் 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். மேலும், விசாரணையில் சாம்பசிவராவ் சென்னையில் தங்க கட்டிகளை வாங்கி கொண்டு, குண்டூருக்கு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து இந்த 8 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: