சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அவரது உறவினர் மகனான 15 வயது சிறுவன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதில், அந்த சிறுமிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதுகுறித்து சிறுமியின் தாய் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: