செய்தி துளிகள்

* உலக கோப்பையை  கபில் தலைமையிலான இந்திய அணி  முதல்முறையாக 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வென்றது. அந்த சாதனை நிகழ்வு நேற்று வீடியோவாகவும், படங்களாகவும் சமூக ஊடகங்களில் வைரலாகின.

* அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டியில்  இந்தியா சார்பில் பங்கேற்க ஹரி நடராஜ், சஜன் பிரகாஷ்,  குஷாக்ரா ராவத், அத்வைத் பேஜ் ஆகியோர்  தயாராகி வருகின்றனர். அதிலும் முதல் 3பேர் துபாயில் தங்கி 2மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் இடம் பெற மாட்டார். காரணம் அவர் மெக்காவுக்கு  ஹஜ் புனித பயணம்  செல்கிறார்.

* ஏஷியன் கிரிக்கெட் கவுன்சில்  சார்பில்  ஏசிசி மகளிர் டி20 சாம்பியன்ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில்  நடந்தது. அங்கு நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அமீரகம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்த 2 அணிகளும் இந்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பையில் விளையாட தகுதிப் பெற்றன.

* டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரோ சமீபத்தில் பின்லாந்தில் நடந்த போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கமும் வென்றார். இம்மாத இறுதியில் சுவீடனில் நடைபெற உள்ள டைமண்ட் லீக்  போட்டியில் பங்கேற்க ஸ்டாக்ஹோம் சென்றுள்ளார்.

* இத்தாலியில் நடைபெறும் 4 நாடுகளுக்கு இடையிலான யு-17 மகளிர் கால்பந்து ஆட்டத்தில் இந்தியா  நேற்று1-3 என்ற கோல் கணக்கில் சிலி அணியிடம் தோல்வியை சந்தித்தது.

Related Stories: