×

பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கடைசியாக ‘அகண்டா’ படத்தில் பாலகிருஷ்ணா நடித்தார். இப்போது கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து அவரது தரப்பில் கூறும்போது, ‘எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாலய்யாவுக்கு (பாலகிருஷ்ணா) கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவருடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா முழுமை யாக குறையாததால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : Balakrishna , Corona infection to Balakrishna
× RELATED பாலகிருஷ்ணா ஜோடியாகும் தமன்னா