×

அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கார்களுக்க விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு (ஸ்டார் ரேட்டிங்) வழங்கப்படும் என்று ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் அறிவித்தார். ‘இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு செய்து வாங்கலாம்,’ என்று அவர் கூறினார்.  இந்நிலையில், இந்த திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் பிரிவு 1ல் உள்ள வாகனங்களுக்கு மட்டும்  கார் மதிப்பீடு திட்டம் பொருந்தும். இதன் எடை 3.5 டன்னுக்கு குறைவானதாக இருக்க வேண்டும். மோதல் சோதனைகளில் கார்களின் செயல்பாடுகளை பொருத்து, நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.   



Tags : From April 1 of the following year Star rating for cars: United States announcement
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் சமத்துவமின்மை உச்சம் தொட்டது!!