படம் முடிந்த பிறகு திடீரென்று ஓட்டம் பிடித்த மலையாள நடிகரால் பரபரப்பு

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர், ஷைன் டோம் சாக்கோ. தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘பந்த்ரண்டு’ என்ற படம் நேற்று முன்தினம் கேரளாவில் வெளியானது. கொச்சியிலுள்ள ஒரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன், ரசிகர்களின் கருத்துகளை கேட்க தியேட்டர் முன்பு ஏராளமான தனியார் டி.வி மற்றும் யூடியூப் சேனல்களை சேர்ந்தவர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது ஷைன் டோம் சாக்கோ படம் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் நிருபர்கள் அவரது கருத்தைக் கேட்க முயன்றனர். ஆனால், திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் ஷைன் டோம் சாக்கோ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதைப் பார்த்த அனைவரும்

அதிர்ச்சி அடைந்தனர். அவர் எதற்காக ஓடுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. எனினும் சில நிருபர்கள் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். தியேட்டரை ஒருமுறை வலம் வந்த ஷைன் டோம் சாக்கோ, பிறகு தியேட்டரை விட்டு வெளியேறி ரோட்டுக்கு ஓடினார். பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

Related Stories: