தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 80 அதிகரித்துள்ளது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு 20 குறைந்து ஒரு கிராம் 4,745க்கும், சவரனுக்கு 160 குறைந்து ஒரு சவரன் 37,960க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,755க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 38,040க்கும் விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தங்கம் விலை சவரன் மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: