உக்ரைன் நோக்கி சென்ற ரஷ்ய விமானம் கீழே விழுந்து வெடித்து தீப்பிடித்தது 4 பேர் பலி

மாஸ்கோ: உக்ரைன் நோக்கி சென்ற ரஷ்ய சரக்கு விமானம், கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ரஷ்யாவின் ரியாசான் நகரில் எரிபொருள் நிரப்பி கொண்டு சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 9 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக தரையில் மோதி விமானம் தீப்பிடித்தது. இதில் பயணித்த 9 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரியாசான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பின்புறம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் விழுந்ததும் வெடித்து சிதறி தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. விமானம் பயிற்சியில் இருந்தபோது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், விமான ஊழியர்களின் உயிரிழப்பு பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

Related Stories: