சிறைகளில் நீண்ட ஆண்டுகளாக உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் இயக்கத்தின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து சிறைவாசிகள் விடுதலைக்கான ஆதிநாதன் குழுவின் அறிக்கையை வெளியிட்டு காலம் தாழ்த்தாமல் மாநில அரசிற்கு உள்ள அதிகாரத்தின் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவது ஆளுரின் மாண்புக்கு உரியதல்ல. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற விழாவில் சனாதானத்தை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி கல்லூரி விழா ஒன்றிலும் சனாதானக் கருத்துக்களை முன்வைத்து பேசியும், அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கருத்து கூறியுள்ளார்.

ஆளுநராக பொறுப்பு ஏற்றதில் இருந்து மதம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ சித்தாந்த கருத்தை தொடர்ந்து திணிக்க முயலும், ஆளுநரின் செயலை இம்மாநில நிர்வாகிகள் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தொடர் காவல்நிலைய கஸ்டடி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுச்செயலாளர் ஏ.முகைதீன் அப்துல் காதர் நன்றி கூறினார்.

Related Stories: